பத்திரிக்கை, ஊடக செய்தி அறிக்கை: நாள் :01.02.2020
இடம்: மன்னார்குடி..
மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் அவசரக் கூட்டம் மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பங்கேற்ற பின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.'
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் திட்டங்கள் இடம்பெறாதது ஏமாற்றமளிக்கிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனை கணக்கில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
2012 முதல் தொடர்ந்து 2019 ம் ஆண்டு வரை வறட்சி உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டு மகசூல் இழந்து வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்ய மறுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
விவசாய உற்பத்தி பொருளுக்கு லாபகரமான விலை நிர்ணயம் செய்யவோ, சந்தை வசதியை உறுதி படுத்துவதற்கான அறிவிப்புகள் இடம் பெறாமல் 2022 ல் இரட்டிப்பு என்பது காகிதப்பூ போன்றது.
உற்பத்தி சிலவு மற்ற நாடுகளை விட பல மடங்கு கூடுதலாக உள்ள நிலையில் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி என்பது விளம்பரத்திற்கு மட்டுமே உதவும்.
நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் 7 வட மாநிலங்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்காக ரூ 16500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு எந்தப் பயனுமில்லை.
மேலும் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. ரூ 15 லட்சம் கோடி கடன் இலக்கு என்பது பயனற்றது இது விவசாயிகளுக்கு ஏமாற்றமளிக்கும் பட்ஜெட் ஆகும்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில 2வது மாநாடு வரும் மார்ச் 7, 8 தேதிகளில் இரு நாட்கள் மன்னார்குடியில் நடைபெற உள்ளது. கருத்தரங்கம், கலை நிகழ்ச்சிகள், வேளாண் இயந்திர கன்காட்சிகள் நடைபெறும். இம்மாநாட்டில் அமைச்சர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் , ஆய்வாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்க உள்ளனர் என்றார். மாநில அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர், தஞ்சை மாவட்ட செயலாளர் எம்.மணி' நாகை மாவட்ட செயலாளர் எஸ்.இராமதாஸ், திருவாரூர் மாவட்ட தலைவர் எம்.சுப்பையன், தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி, செயலாளர் ரமேஷ உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இவன் :என்.மணிமாறன் செய்தி தொடர்பாளர் .