கல்வித்துறைக்கு 99,300 கோடி ஒதுக்கீடு - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

2020&-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.
மத்திய பட்ஜெட்டில் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார். 
2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 
இந்நிலையில், பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்போம், படிக்க வைப்போம் திட்டம் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,  தொடக்கப் பள்ளிகளில் பெண் குழந்தைகளைச் சேர்க்கும் விகிதம் அதிகரித்துள்ளது. ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளை அதிக அளவில் பள்ளியில் சேர்க்கிறார்கள்.
தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி குடும்பங்கள் பலனடையும் என்றும் பெண் குழந்தைகள் திட்டத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
பெண் குழந்தைகள் திட்டம் குறித்து வாசிக்கும் போது நிர்பயா நிர்பயா என்று எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
வருமான வரி குறித்து நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
ரூ.5 லட்சம் முதல் ரூ.7.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு இதுவரை இருந்த 20%வருமான வரி 10 % ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல ரூ.7.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 20%ல் இருந்து 15% ஆகக் குறைக்கப்படுகிறது.
மேலும், ரூ.10 லட்சம் முதல் ரூ.12.5 லட்சம்  வரை ஆண்டு வருமானம் பெறுவோர் இதுவரை செலுத்தி வந்த வருமான வரி 30%ல் இருந்து 20% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.12.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சம் வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% இருந்து 25% ஆகக் குறைக்கப்படுகிறது.
ரூ.15 லட்சத்துக்கும் மேல்  ஆண்டு வருமானம் ஈட்டுவோரின் வருமான வரி 30% ஆகவே நீடிக்கும்.
ரூ. 5 லட்சம் வரை வருமான வரி இல்லை
ரூ.5 - 7.5 லட்சம் வரை : 10%
ரூ.7.5 - 10 லட்சம் வரை : 15%
ரூ.10 - 12.5 லட்சம் வரை: 20%
ரூ.12.5 - 15 லட்சம் வரை: 25%
ரூ.15 லட்சத்துக்கு மேல்: 30% ஆகவே நீடிப்பு
வருமான வரி குறைப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும்.
ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு வழங்கும் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட் உரையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 
2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார். 
இதில், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய அவசியமான பான் அட்டை பெறும் நடைமுறை எளிதாக்கப்படும் என்று கூறியுள்ளார். ஆதார் எண் அடிப்படையில் ஆன்லைனில் உடனடியாக பான் கார்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும்  என்றும் இதற்காக பான் கார்டு கோரி இனி விண்ணப்பம் பூர்த்தி செய்யவேண்டியதில்லை என்று தெரிவித்தார். 
வங்கிகளில் பணம் டெபாசிட் மீதான காப்பீடு தொகையை ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
2020 - 21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து வாசித்து வருகிறார். 
கூட்டுறவு வங்கி விதிகளில் பெருமளவு மாற்றங்கள் கொண்டு வரப்படும்.
வங்கிகளில் வாடிக்கையாளர்களின் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
வங்கிகளில் பணம் டெபாசிட் காப்பீடு தொகை ரூ..5 லட்சமாக உயர்த்தப்படும்.
வங்கிகள் திவாலானால் வைப்புத் தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வழங்கப்படும்.
சுற்றுலாத்துறையின் கீழ் தமிழகத்தில் உள்ள ஆதிச்ச நல்லூர் உள்ளிட்ட 5 இடங்களில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 
2020-&21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 
இதில், தமிழகத்தில் தொல்லியல் ஆய்வு இடமான ஆதிச்சநல்லூரில் சிறப்பு வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். 
மேலும், ஹரியாணாவின் ராக்கி கார்க்கி, உத்தரப் பிரதேசத்தின் ஹஸ்தினாபூர், மகாராஷ்டிராவிலுள்ள திவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா ஆகிய இடங்களிலும் அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார். 
2020&-21 மத்திய பட்ஜெட்டில் சுற்றுலாத் துறைக்கு ரூ.2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலாத் துறையில் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. 65வது இடத்தில் இருந்து 34வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்திய அரசிடம் உள்ள ஐடிபிஐ வங்கிகளின் பங்குகள் விற்பனை செய்யப்படும்.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு முற்றிலும் தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார். 
மேலும், மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைத் தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு விரைவில் கொண்டு வரப்படும் என்றார். 
தொடர்ந்து, குழாய் வழியே சமையல் எரியாவு எடுத்துச் செல்லும் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதன்படி, எரிவாயு குழாயை எடுத்துச் செல்லும் குழாய் வழித்தடங்கள் 16,200 கிலோ மீட்டர்  தொலைவுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் அறிவித்தார். 
கல்வித்துறைக்கு 2020&-21 பட்ஜெட்டில் 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மேலும் திறன் மேம்பாட்டுக்காக ரூ. 3,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
150 பல்கலைக்கழங்களில் புதிய பாடப்பிரிவுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
முன்னணி பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று பட்டம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.
நாடு முழுவதும் மருத்துவர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் 
இந்தியாவில் கல்வித்துறையில் நேரடி அந்நிய முதலீடுக்கு அனுமதி அளிக்கப்படும்.
தேசிய காவல்துறை, தேசிய தடய அறிவியல் துறை பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படும்.
தனியாருடன் இணைந்து மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
மாணவர்கள் இந்தியாவிலேயே கல்வி பயிலும் வகையில் ஊக்கப்படுத்தப்படுவார்கள். 
நாட்டில் உயர்தர கல்வி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.